அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி?

ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் தாக்கி சேதப்படுத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி?
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் நேற்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு அவர் திருமங்கலம் நோக்கி காரில் சென்றார். ஆர்.பி.உதயகுமாருடன் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

மங்கல்ரேவு பகுதியில் அவருடைய ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் திடீரென மறித்தனர். பின்னர் அவர்கள், டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்களை தாக்கி சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com