கைதானவரை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி

கைது செய்யப்பட்டவரை விடுவிக்கக்கோரி செய்யாறு போலீஸ் நிலையத்தை கிரா மக்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைதானவரை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி
Published on

செய்யாறு

கைது செய்யப்பட்டவரை விடுவிக்கக்கோரி செய்யாறு போலீஸ் நிலையத்தை கிரா மக்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி அலுவலகத்தை பூட்டினர்

செய்யாறு தாலுகாவில் உள்ள தொழுப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்றும், சாலை, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யபடவில்லை என்றும் கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் துரை என்பவருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை, கிராம மக்கள் நடத்த விடாமல், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி சென்றதாகத் தெரிகிறது. மறு நாள் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் குடிநீர் பிரசசினை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதே கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மற்றும் சிலரும் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களிடம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் துரை, தன்னை சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாகக் கூறி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை செவ்வாய்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

முற்றுகையிட முயற்சி

இதையறிந்த அப்பகுதி கிராம மக்கள கைது செய்யப்பட்ட பரசுராமனை விடுவிக்கக் கோரி செய்யாறு போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட முயற்சித்து உள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும், ''புகாரின் பேரில் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், சட்டபடி தான் எதிர் கொள்ள வேண்டும். எனவே கலைந்து செல்லுங்கள்'' என எச்சரித்தனர். இருப்பினும், கிராம மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சல் போட்டனர். இதையடுத்து அனைவரையும் எச்சரித்த போலீசார, கிராம மக்களை போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com