சென்னையில் அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி - ஐ.டி. ஊழியர் கைது

நகை அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி - ஐ.டி. ஊழியர் கைது
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூர் அடுத்த இந்திராநகர் பகுதியில், அதிகாலை நேரத்தில் அடகு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு(வயது 25) என்பதும், சாப்ட்வேர் இன்ஜினியரான அவர் சென்னை பெருங்குடியில் தங்கியிருந்து தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

அவரிடமிருந்து செல்போன், கட்டிங் மெஷின், சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஸ்ரீராமை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோர்ட்டு உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com