போலீஸ் எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிக்க முயற்சி - 4 பேர் கைது


போலீஸ் எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிக்க முயற்சி - 4 பேர் கைது
x

வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள காமன்தொட்டி கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரவீன்குமார் என்பவர் அவரது அலுவலகத்திற்கு 4 நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்த காரில் போலீஸ் என எழுதப்பட்டிருந்தது.

அவர்கள் பிரவீன்குமாரிடம், பணமோசடி வழக்கில் அவரது பெயர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். இதனால் பிரவீன்குமார் செய்வதறியாது திகைத்துள்ளார். தனக்கு பணமோசடி வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த நபர்கள் பிரவீன்குமாரை தங்கள் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பிரவீன்குமார், அவர்களிடம் பணத்தை எடுத்து வருவதாக கூறி தப்பி ஓடி வந்தார்.

பின்னர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், போலீஸ் வேஷம் போட்டு பணம்பறிக்க முயன்ற மல்லேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story