2 டன் மஞ்சள் இலங்கைக்கு கடத்த முயற்சி

வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 டன் மஞ்சள் இலங்கைக்கு கடத்த முயற்சி
Published on

மண்டபம்

வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

மஞ்சள் மூடைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் நேற்று மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் உள்ளிட்ட சிலர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதைதொடர்ந்து சுங்கத்துறையினர் அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஏராளமான மஞ்சள் மூடைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணை

அந்த வாகனத்தில் இருந்த சுமார் 2 டன் மஞ்சள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து அந்த வாகனத்தின் உரிமையாளர் யார், தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூடைகள் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com