நகைக் கடையில் கம்மலை திருட முயற்சி: கையும் களவுமாக பிடிப்பு

நகைக் கடை ஊழியர் கவனிக்காத நேரம் பார்த்து கேசவன் தங்க கம்மலை திருடி தனது லுங்கியில் மறைத்து வைத்தார்.
கணவன் மனைவி போல் நகை திருடியவர் கைது
Published on: 

காஞ்சிபுரம்,

நகைக் கடையில் கம்மலை திருட முயற்சி செய்தவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்டனர்.

நகை திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பு நகை வாங்குவதற்காக கேசவன் மற்றும் பாண்டீஸ்வரி ஆகிய 2 பேர் கணவன் மனைவி போல் வந்தனர். அப்போது நகைக் கடை ஊழியர் நகைகளை கண்முன்னே எடுத்து வைத்தார். ஊழியர் கவனிக்காத நேரம் பார்த்து கேசவன் தங்க கம்மலை திருடி தனது லுங்கியில் மறைத்து வைத்தார். இதனை கடைக்கு வந்த மற்றொரு நபர் பார்த்து ஊழியரிடம் தெரிவித்தார். இதையடுத்து, கேசவன் லுங்கியில் மறைத்து வைத்திருந்த கம்மலை எடுத்து கொடுத்தார்.

பின்னர், இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கேசவன் மற்றும் பாண்டீஸ்வரியை கைது செய்தனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கணவன் மனைவி போல் கடைக்கு சென்று நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X