கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் மிரட்டல், அடிதடி வழக்கில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட பாளையங்கோட்டை, தெற்கு அரியகுளத்தை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் உடையார்(எ) உதயகுமார் (வயது 44) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்சொன்ன நபர் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி மற்றும் பெண்ணை துன்புறுத்தியது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன குற்றவாளி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் உடையார்(எ) உதயகுமார், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com