கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியை சேர்ந்த கருத்தபாண்டி மகன் முருகன் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், முருகன் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் முருகன், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com