சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர் மீது கொலைமுயற்சி வழக்கு

காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர் மீது கொலைமுயற்சி வழக்கு
Published on

சென்னை,

நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வீட்டில் சம்மன் ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சீமானின் காவலாளி போலீசாரை தாக்கியதோடு கையில் இருந்து துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சூழலில் சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் காவலர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. இதன்படி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொரு புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தசூழலில், சீமான் வீட்டில் கைதான காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை சோழிங்கநல்லூர் நீதிபதி கார்த்திகேயன் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சம்மனை கிழித்த சுபாகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com