கொலை முயற்சி குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை 53 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை முயற்சி குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், காவல்கிணறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன்(எ) காக்கா நாகராஜன் (வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் கொலை முயற்சி, கொள்ளை, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கவனத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து அவர், மேற்சொன்ன நபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின் பேரில், மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மேற்சொன்ன குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை 53 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com