ரெயில் மறியல் முயற்சி; ஆதித்தமிழர் கட்சியினர் கைது

ரெயில் மறியல் முயற்சி செய்த ஆதித்தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியல் முயற்சி; ஆதித்தமிழர் கட்சியினர் கைது
Published on

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அம்பேத்கர் எழுதிய சட்டத்தை திருத்தி இந்தியில் எழுதுவதை கைவிட வலியுறுத்தியும், மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி வரும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் நேற்று ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் ரெயில் மறியல் செய்வதற்காக பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். ரெயில் நிலையத்தின் நுழைப்பகுதியில் நின்று ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மேற்கு மாவட்ட தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் தமிழ் முருகன், இரணியன், உதயகுமார், மூர்த்தி, முத்து, மாரி, காளியம்மாள் உள்பட பலர் பா.ஜ.க. அரசை கண்டித்து கோசமிட்டனர்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்.

அவர்கள் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி ரெயில் நிலைய நுழைவு பகுதி மற்றும் தண்டவாளப் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com