3 மாதங்களாக பூட்டியிருந்த ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி... திருவொற்றியூரில் பரபரப்பு

அதே பகுதியில் ரகுநாதன் என்பவரது மளிகை கடை பூட்டை கடப்பாரையால் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
கொள்ளை முயற்சி
Published on: 

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் மெயின் தெருவில் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த ஏ.டி.எம். மையம் பூட்டியே கிடக்கிறது.

ஏ.டி.எம் மையம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு ஏ.டி.எம். எந்திரம் இயங்காத நிலையில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். மைய அறையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினர்.

பின்னர் அதே பகுதியில் ரகுநாதன் என்பவரது மளிகை கடை பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.21 ஆயிரம் மற்றும் சாமி படம் அருகே பீரோவில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் என ரூ.29 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் அருகில் உள்ள செல்போன் கடைக்குச் சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி, மளிகை கடையில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com