சென்னை தியாகராயநகரில் மழைநீர் வடிகால் கட்டுமான கம்பிகளை திருட முயற்சி - தடுக்க முயன்ற மேஸ்திரி மீது தாக்குதல்

சென்னை தியாகராயநகரில் மழைநீர் வடிகால் கட்டுமான கம்பிகளை கும்பல் திருட முயன்றனர். இதை தடுக்க முயன்ற மேஸ்திரியை அந்த கும்பல் தாக்கியது.
சென்னை தியாகராயநகரில் மழைநீர் வடிகால் கட்டுமான கம்பிகளை திருட முயற்சி - தடுக்க முயன்ற மேஸ்திரி மீது தாக்குதல்
Published on

சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் மழைநீர் வடிகால் பணி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்த கும்பல் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றது. இதை கவனித்த கட்டுமான மேஸ்திரி லோகநாதன் (வயது 43), அந்த கும்பலை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் லோகநாதன் மீது கற்கள், பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் லோகநாதன் காயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். காயமடைந்த லோகநாதன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

லோகநாதனை தாக்கி விட்டு சென்றவர்கள் பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸ் பூத் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் போலீஸ் பூத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com