பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி

பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி
பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி
Published on

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்டது சேது நாராயணபுரம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரது மனைவி முத்துமாரி (வயது 36). தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். முத்துமாரி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது ஆர்.சி. தெருவில் உள்ள சின்னப்பர் கோவில் அருகே வந்த பொழுது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றார்.

அப்போது கூச்சலிட்டு தப்பி ஒட முயன்ற முத்துமாரியை முதுகில் கத்தியால் குத்தி விட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் விசாரணையில் சிவகாசி அருகே உள்ள நடுவபட்டியை சேர்ந்த நாகராஜ் (எ) புறா நாகராஜ் என்பது தெரியவந்தது. வத்திராயிருப்பு போலீசார் நாகராஜ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com