அ.தி.மு.க சிதறும் என்ற முதல் அமைச்சரின் எண்ணம் ஈடேறாது: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க இரண்டாக , மூன்றாக சிதறும் என்ற முதல் அமைச்சரின் எண்ணம் ஈடேறாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க சிதறும் என்ற முதல் அமைச்சரின் எண்ணம் ஈடேறாது: எடப்பாடி பழனிசாமி
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பெரும்பாக்கம் சேகரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க இரண்டாக , மூன்றாக சிதறும் என்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணம் ஈடேறாது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் பற்றி பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லை. மக்களுக்கு சேவை செய்வதில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம்  திகழ அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்தான் காரணம்"இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com