பயணிகளின் கவனத்திற்கு.. இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து - முழு விவரம்


பயணிகளின் கவனத்திற்கு.. இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து - முழு விவரம்
x
தினத்தந்தி 20 March 2025 9:09 AM IST (Updated: 20 March 2025 10:00 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னையில் மின்சார ரெயில்களானது மிகவும் முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த மின்சார ரெயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என்றும், பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்டிரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புறநகர் ரெயில்கள் ரத்து - முழு விவரம்:-







1 More update

Next Story