

சென்னை,
தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 11-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருநெல்வேலி - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் அன்று மாலை அங்கிருந்தே சென்னைக்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது, அதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டு, திருநெல்வேலி - தாழையூத்து இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12631) தாழையூத்து வரை செல்லும். தாழையூத்து - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், ஜூன் 28-ந் தேதி (நாளை மறுநாள்) திருநெல்வேலியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும். அதாவது, இந்த ரெயில் திருநெல்வேலி - தாழையூத்து இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.