

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி (TEN) ரெயில் நிலையத்தில் நடைபெறும் நடைமேடை 6 தண்டவாள இணைப்பு மற்றும் யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக பல்வேறு ரெயில் சேவைகள் 19.06.2026 முதல் 30.06.2026 வரை வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
1) 16846 (செங்கோட்டை – ஈரோடு விரைவு ரெயில்) பாவூர்சத்திரம்- கடையம் - அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி - கல்லிடைக்குறிச்சி - திருநெல்வேலி - வழியாக செல்வதற்குப் பதிலாக தென்காசி - ராஜபாளையம் - விருதுநகர் வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
2) 16845 (ஈரோடு – செங்கோட்டை விரைவு ரெயில்) கோவில்பட்டி - திருநெல்வேலி - சேரன்மகாதேவி - கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் - கடையம் - பாவூர்சத்திரம் வழியாக செல்வதற்குப் பதிலாக, விருதுநகர் - ராஜபாளையம் - தென்காசி வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
3) 20684 (செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரெயில்) 29.06.2026 அன்றைய தினம் மட்டும் பாவூர்சத்திரம் - அம்பாசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி - சேரன்மகாதேவி - திருநெல்வேலி வழியாக செல்வதற்குப் பதிலாக, ராஜபாளையம் - விருதுநகர் வழியாக செல்லும்.
இந்த ரயிலுக்கு சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.