பயணிகள் கவனத்திற்கு.. தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் - வெளியான முக்கிய தகவல்

தண்டவாள மறுசீரமைப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு.. தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் - வெளியான முக்கிய தகவல்
Published on

மதுரை,

சீரமைப்பு பணிகள்

நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) வருகிற 20-ந் தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) அன்றைய தினம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை-புனலூர் ரெயில்

மதுரை-புனலூர் ரெயில் (வ.எண்.16729) வருகிற 26-ந் தேதி முதல் வரு கிற 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16730) வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரம்-கன்னியாகுமரி வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621) வருகிற 27-ந் தேதி, 29-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22622) வருகிற 28-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வ.எண். 16846) வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டள்ளது. மறுமார்க்கத்தில் ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845) வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-கோவை ரெயில்

நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண். 16321) நாளை (ஞாயிற்றுக்கி ழமை), வருகிற 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவை புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16322) நாளை, 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20692) வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.35 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20691) வருகிற 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்

திருச்செந்தூர்-பாலக்காடு

திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் (வ.ண்.16732) வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திருச்செந்தூர்-மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும்.

இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி மதுரை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மட்டும் மதுரையில் இருந்து மாலை 4.20 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16731) வருகிற 25,26,28 மற்றும் 29-ந் தேதிகளில் மணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.

24-ந் தேதி தாழையூத்து ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் மதுரை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

நெல்லை எக்ஸ்பிரஸ்

நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12632) வரு கிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண். 12631) வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மணியாச்சி ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

நாகர்கோவில்-கோவை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22667) வரு கிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.22668) வருகிற 26-ந் தேதி முதல் வருகிற 29-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.

பாலருவி ரெயில்

தூத்துக்குடி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16791) வருகிற 27,28-ந் தேதிகளில் கொல்லம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16792) வருகிற 27,28-ந் தேதிகளில் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ்

திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20606) வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20605) வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை விருதுநகர் வரை இயக்கப்படும். மேலும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com