பயணிகள் கவனத்திற்கு.. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

ஏலகிரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 23-ந்தேதி முதல் அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களை கடந்து செல்லும் நேரம் மாற்றப்படுகிறது.
பயணிகள் கவனத்திற்கு.. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
Published on

சென்னை,

ஜோலார்பேட்டை - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இயக்கப்பட்டு வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16090) நவம்பர் 23-ந்தேதி முதல் அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களை கடந்து செல்லும் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரெயில் அரக்கோணத்தை காலை 7.48 மணிக்கு வந்தடைவதற்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக 7.43 மணிக்கே வந்தடையும். 2 நிமிடங்கள் அங்கு நிற்கும் ரெயில் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல், திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கும் 10 நிமிடம் முன்னதாக காலை 8.08 மணிக்கும், பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கும் 10 நிமிடம் முன்னதாக காலை 8.38 மணிக்கும் வந்தடையும். இந்த இரு ரெயில் நிலையங்களிலும் 2 நிமிடங்கள் நின்று செல்லும். மற்ற ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com