பயணிகள் கவனத்திற்கு.. சென்னை எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டன. மேலும், பராமரிப்பு பணி நிமித்தமாக மின்சார ரெயில் சேவைகள் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனால் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த சூழலில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த முக்கிய பராமரிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே சென்னையில் மின்சார ரெயில்கள் பழைய அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.

இந்நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் உள்ள நடைமேடை எண்.10 மற்றும் 11-ல் நடைபெற்று வரும் 4ம் கட்ட ரெயில் நிலைய சீரமைப்பு பணிகளை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகளின் அமைப்பில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரெயில் சேவைகள் குறுகிய நேரத்திற்கு நிறுத்தப்படுதல்:

* ரெயில் எண். 12632: திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ், 6ம் தேதி ஏப்ரல் முதல் 21ம் தேதி ஏப்ரல், 2026 வரை தாம்பரத்தில் குறுகிய நேரத்திற்கு நிறுத்தப்படும். தாம்பரத்தை வந்தடையும் நேரம் காலை 6.25 மணி.

* ரெயில் எண். 16752: ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், 6 ஏப்ரல், 2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் குறுகிய நேரத்திற்கு நிறுத்தப்படும். தாம்பரத்தில் வந்து சேரும் நேரம் காலை 7.10 மணி.

* ரெயில் எண் 12760: ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ், 5 ஏப்ரல், 2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும். தாம்பரத்தில் வந்து சேரும் நேரம் காலை 7 மணி.

ரெயில் சேவைகள் புறப்படும் இடத்தில் மாற்றம்:

* ரெயில் எண் 12661: சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், 7 ஏப்ரல் முதல் 22 ஏப்ரல், 2026 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் இரவு 20.05 மணி.

* ரெயில் எண் 16751: சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 7 ஏப்ரல், 2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரம் இரவு 21.05 மணி.

* ரெயில் எண் 12759: தாம்பரம் - ஐதராபாத் எக்ஸ்பிரஸ், 6 ஏப்ரல், 2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும். சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் நேரம் மாலை 18.20 மணி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com