பயணிகள் கவனத்திற்கு.. தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பயணிகள் கவனத்திற்கு.. தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தாம்பரத்தில் இருந்து வரும் 26, ஜூன் 2-ந் தேதிகளில் (செவ்வாய்கிழமை) காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06075) மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும். மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து வரும் 27, ஜூன் 3-ந் தேதிகளில் (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறபபு ரெயில் (06076) 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரெயில், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஷ்வர், கட்டாக், கோரக்பூர் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com