

சென்னை,
பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் தேவையை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 20-ந்தேதி (நாளை மறுநாள்) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06043) மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21-ந்தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06044) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 மணிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (19-ந் தேதி) காலை 8 மணிக்கும் தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.