பயணிகள் கவனத்திற்கு.. குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக செல்லும்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திருவனந்தபுரம் மண்டலத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஜூலை மாதம் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 10.40 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 3 (இன்று) மற்றும் 10-ந் தேதிகளில், வழியில் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.

இதே ரெயில், ஜூலை 5, 7, 12, 14, ஆகஸ்டு 4 ஆகிய தேதிகளில், வழியில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், ஜூலை 17, 19, 21, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில், வழியில் 2 மணி நேரம் 15 நிடங்கள் தாமதமாகவும், ஜூலை 9-ந் தேதி, வழியில் 55 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com