

சென்னை,
திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06110) செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 28-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109) செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 29-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையேயான இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.