அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு... வெளியான அறிவிப்பு

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள், இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு... வெளியான அறிவிப்பு
Published on

சென்னை,

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இனி தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விழுப்புரம், கும்பகோணம், சேலம், பெங்களூரு மற்றும் ஈசிஆர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு விரைவு பேருந்துகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி வரை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம், பயணிகளின் வங்கிக்கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com