

சென்னை,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 12666) இன்று (வியாழக்கிழமை) மற்றும் 15-ந்தேதியும், கன்னியாகுமரி-ஹவுரா அதிவி ரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16128) நாளைமறுநாளும் (சனிக் கிழமை), குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16128) இன்று (வியாழக்கிழமை) முதல் 15-ந்தேதி வரையிலும், கன் னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்:- 07229) நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர், திருச்சி வழியாக இயக்கம்
மேலும், கோயம்புத்தூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-16322) நாளை மறுநாள் (சனிக்கிழமை), மதுரை சந்திப்பை தவிர்த்து கரூர். திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாகவும், திருவனந்தபு ரம் சென்டிரல்- திருச்சி அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 22628) வருகிற 18-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.