சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... பேருந்து புறப்படும் இடங்கள் விபரம்

சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... பேருந்து புறப்படும் இடங்கள் விபரம்
Published on: 

சென்னை,

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் என்ற விபரங்கள் பின்வருமாறு;

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம்

திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தார்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள், திண்டிவளம் வழியாக பண்ருடி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்ததூர், செங்கோட்டை, திண்டுக்கல். புழனி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் (CMDA காலநிலை பூங்கா அருகில்)

செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் (சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது)

கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் (கிளாம்பாக்கம் MTC பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் வரை கட்டணமில்லா இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்)

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை சாலை (ECR) மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com