

சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் என்ற விபரங்கள் பின்வருமாறு
திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேலும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளுக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் இங்கே நிற்கும்.
கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பேராவூரணி, திருவாரூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நிற்கும். காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூர் செல்லும் பேருந்துகளும், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
பொன்னேரி, ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் ( ஆந்திரா மாநிலம்) செல்லும் பேருந்துகளும், மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து புறப்படும்.