ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் 17-ந்தேதி ஏலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4,000 கோடி மதிப்பில் 6 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.31 சதவீத பிணையப் பத்திரங்கள் 2033 மறுவெளியீடு ரூ.1,000 கோடி, 7.54 சதவீத பிணையப் பத்திரங்கள் 2036 மறுவெளியீடு ரூ.1,000 கோடி, 7.61 சதவீத பிணையப் பத்திரங்கள் 2056 மறுவெளியீடு ரூ.1,000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

Also Read
சென்னையில் நாளை மறுநாள் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
கோப்புப்படம்

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்ரவரி 17, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) பிப்ரவரி 17, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com