டாக்டர் ராமதாசுடன், ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்திப்பு

மத்திய மந்திரி அமித்ஷா, மதுரை வந்துள்ள நிலையில் குருமூர்த்தியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை ஆடிட்டர் குரூமூர்த்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என ராமதாஸ், குருமூர்த்தி இருவரும் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்தார். சென்னை தியாகராயநகரில் உள்ள ஏ.கே.மூர்த்தி மகன் விஜய் மகேஷ் இல்லத்தில் இருந்த ராமதாசுடன், ஆடிட்டர் குருமூர்த்தி 2-வது முறையாக இன்று இரவு சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.மத்திய மந்திரி அமித்ஷா, மதுரை வந்துள்ள நிலையில் குருமூர்த்தியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






