வெளி மாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை போட அதிகாரம்

தற்காலிக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.
வெளி மாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை போட அதிகாரம்
Published on

சென்னை,

எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை விதிக்க தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.சாண்ட்

எம்.சாண்டை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தவும் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதுமான அளவில் எம்.சாண்ட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

முன்னதாக கட்டுக்கடங்காத விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கட்டுமான தொழில் முடக்கத்தை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், கேரளா, கர்நாடகாவுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடுத்து, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com