பாலக்கோட்டில்அதிக பயணிகள் ஏற்றி சென்ற 5 ஆட்டோக்கள் பறிமுதல்

பாலக்கோட்டில்அதிக பயணிகள் ஏற்றி சென்ற 5 ஆட்டோக்கள் பறிமுதல்
Published on

பாலக்கோடு:

பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிகளவில் பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதாகவும் இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி நேற்று காலை பாலக்கோடு பஸ் நிலையம், சர்க்கரை ஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினார். அப்போது ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர் விதிமுறைகளை மீறி அதிகளவில் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com