ஆட்டோ கவிழ்ந்து விபத்து; காவலாளி சாவு

சாலையின் குறுக்கே பன்றி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காவலாளி பலியானார்.
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; காவலாளி சாவு
Published on

திருவள்ளூர்,

ஆட்டோ கவிழ்ந்தது

காஞ்சீபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரன் இரவு பணி முடித்துவிட்டு பேரம்பாக்கம் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். ஆட்டோ திருவள்ளூர் அடுத்த இருளச்சேரி நாகாத்தம்மன் புத்துக்கோவில் அருகே வரும்போது, திடீரென சாலையின் குறுக்கே பன்றி ஒன்று வந்ததில் நிலைத்தடுமாறிய ஆட்டோ பன்றி மீது மோதி கவிழ்ந்தது.

காவலாளி சாவு

இதில் ஆட்டோவில் பயணம் செய்த சந்திரன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து காயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக தண்டலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com