உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ - பைக் மோதி விபத்து: ஓட்டுநர் பலி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பழனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ - பைக் மோதி விபத்து: ஓட்டுநர் பலி
விபத்து
Published on: 

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் ரெயில்வே மேம்பாலத்தில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இன்று (சனிக்கிழமை) ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் பலி - ஒருவர் படுகாயம்

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநரை சக பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பழனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X