சென்னை: அஜாக்கிரதையாக ஆட்டோவை இயக்கி பெண் மீது மோதி விபத்து; சிறார் உள்பட 3 பேர் மீது வழக்கு


சென்னை: அஜாக்கிரதையாக ஆட்டோவை இயக்கி பெண் மீது மோதி விபத்து; சிறார் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

இந்த விபத்தில் அந்த பெண் காயமடைந்தார்

சென்னை

சென்னையின் மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3ம் தேதி மதியம் பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் வேகமாக வந்த ஆட்டோ பெண் மீது மோதியது.

இந்த விபத்தில் அந்த பெண் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் மீது கைது நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், அஜாக்கிரதையாக ஆட்டோவை இயக்கி சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சிறார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story