செங்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - அண்ணன் மகன் கைது

செங்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - அண்ணன் மகன் கைது
Published on

பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகே உள்ள பிரளயம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 41). ஆட்டோ டிரைவர். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்தோணி செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு அம்பேத்கர் தெருவில் உள்ள இவரது அண்ணன் காந்தி வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது வழக்கம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் காந்தியின் மனைவி பிரபாவதியை அந்தோணி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அண்ணன் மகன் ஜெய ராகேஷ் என்பவருடன் பகை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று அந்தோணி அண்ணன் காந்தி வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அண்ணன் மகன் ஜெய ராகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்தோணியிடம் தராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் ஜெய ராகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்தோணியை கத்தியால் தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணியை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களை வரும் வழியிலேயே அந்தோணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் அந்தோணி உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அந்தோணியை வெட்டி கொலை செய்த ஜெய ராகேஷை போலீசார் கைது செய்தனர். மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com