ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் அஜித்குமார் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஆம்பூர் அவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் அஜித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com