மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;ஆட்டோ டிரைவர் பலி

பரமத்தி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;ஆட்டோ டிரைவர் பலி
Published on

பரமத்திவேலூர்

ஆட்டோ டிரைவர்

பரமத்தி அருகே உள்ள பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே. நகரில் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து அதே பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு செல்ல கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையின் நடுவே எதிர் புறமாக உள்ள தடுப்பு சுவர் ஓரமாக வந்துள்ளார்.

அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

பலி

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரதராஜன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மொபட் ஓட்டுனர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com