ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

வடமதுரை அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
Published on

வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 26). அவருடைய நண்பர்கள் அருள்தாஸ், பாலமுருகன், பாபு. இதில் பாலமுருகன் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். மற்ற 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவர். கடந்த 20-ந்தேதி இவர்கள் 4 பேரும், திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் வடமதுரை அருகே அளப்பாரிமேடு பகுதியில் அமர்ந்து மதுபானம் குடித்ததாக தெரிகிறது.

அப்போது பாலமுருகனுக்கும், பாபுவுக்கும் இடையே தொழில் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. தொழில் தொடர்பாக தற்போது பேச வேண்டாம் என்று அவர்கள் 2 பேரையும் வீரபுத்திரன் எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், பாபு ஆகியோர் சேர்ந்த வீரபுத்திரனை கத்தியால் குத்தினர். மேலும் அவரை கம்பால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த வீரபுத்திரனை அருள்தாஸ் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் வீரபுத்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் பாலமுருகன், பாபு ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com