ஆட்டோ டிரைவர் தற்கொலை

குடும்ப பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர் தற்கொலை
Published on

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ரமேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com