அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் பலி

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் பலியானார்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் பலி
Published on

ஆம்பூரை அடுத்த பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 3-ந் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com