ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

திருவெறும்பூர்.செப்.3-

திருச்சி காஜா பேட்டை பசுமடம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் குமரவேல் (வயது 37). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டி பகுதிக்கு சவாரிக்கு வந்து விட்டு சென்று கொண்டிருந்தார். நத்தமாடிப்பட்டி வளைவில் வந்தபோது, திடீரென்று நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் நாய் மீது ஆட்டோ மோதாமல் இருப்பதற்காக குமரவேல் ஆட்டோவை வளைத்த போது எதிர்பாராதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடிபாகத்தில் சிக்கிய குமரவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com