வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் - 4 பேர் கைது

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் - 4 பேர் கைது
Published on

சென்னை,

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி பைக், ஆட்டோ பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் சீறிப்பாய்ந்த ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோ ரேஸ் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com