திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை

திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை
Published on

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர். வருகிற 31-ந்தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தரிசனமும் நடக்கிறது.

விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com