திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல நாளை தடை

இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக் கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல நாளை தடை
Published on

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளை மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக் கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com