ஆவடி பஸ் முனையம் இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம்


ஆவடி பஸ் முனையம் இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம்
x

கோப்புப்படம்

இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர வளர்ச்சி குழும திட்டத்தின் கீழ், ஆவடி பஸ் முனையத்தை நவீனபடுத்தி புதிய பஸ் முனையமாக மாற்றி அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால், இந்த பஸ் முனையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும், மற்றும் இங்கு செயல்பட்டு வந்த மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் 14-ந்தேதி (இன்று) முதல் இந்த பஸ் முனையத்துக்கு எதிர்புறத்தில் எம்.டி.எச். சாலையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்படும்.

எனவே, இந்த பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் மேற்குறிப்பிட்ட தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து புறப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக பஸ் முனையத்திலிருந்தே பஸ்கள் இயக்கப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் அங்கு செயல்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story