பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
Published on

நீலகிரி,

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க இன்று முதல் கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் உள்ள பறவைகள் மூலம் தமிழகத்தில் பரவாமல் இருக்க அங்கிருந்து வரும் வளர்ப்புப் பறவைகள் வாகனம் மற்றும் கோழி இறைச்சிகள், தீவனங்கள் மற்றும் முட்டைகள் கொண்டு வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

கூடலூர் வழியில் 7 சோதனைச் சாவடிகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஒரு கால்நடை மருத்துவர் உட்பட 3 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com