ரெயில் தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்: தெற்கு ரெயில்வே வேண்டுகோள்

பொதுமக்களுக்கு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரெயில் தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்:  தெற்கு ரெயில்வே வேண்டுகோள்
Published on

சென்னை,

ரெயில் தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்: பொதுமக்களுக்கு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சமீபகாலமாக, ரெயில் பாதைகளுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் காய்ந்த செடி கொடிகளை எரிக்கும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இத்தகைய செயல்கள் ரெயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. குப்பைகளை எரிப்பதன் மூலம் உருவாகும் அதிகப்படியான வெப்பம் மற்றும் புகை, ரெயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின் கம்பிகளையும் (Overhead Equipment - OHE) மற்றும் நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். இது ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

* ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் காய்ந்த இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வீச வேண்டாம்.

* ரெயில்வே வளாகத்திற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் போடுவதைத் தவிர்க்கவும்.

* ரெயில்வே வளாகத்திற்கு அருகில் குப்பைகள் அல்லது கழிவுகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ரெயில்வே சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரெயில்வேயைப் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் பராமரிக்க குடிமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இது போன்ற பாதுகாப்பற்ற செயல்களைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள ரெயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாதுகாப்பான மற்றும் சீரான ரெயில் போக்குவரத்தை உறுதி செய்யவும், ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் மேலான ஒத்துழைப்பை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் கோருகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com