பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2023- ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது முதல்-அமைச்சரால் உலக மகளிர் தின விழா மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை மற்றும் சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 10.12.2022 க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், (குறுவள மையக் கட்டிடம்), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆலப்பாக்கம், செங்கல்பட்டு என்ற முகவரியில் 3 பிரதிகளை நேரில் சமர்ப்பிக்கவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com